கிரான் பிரதேச செயலகத்தில் பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்களுக்கு கிரான் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் சுகாதார பிசிஆர் பரிசோதனைஎஸ்.எம்.எம்.முர்ஷித்-
ட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட் மூன்றாம் அலையின் பின்னர் கொவிட் வைரஸ் தொற்றாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதனால் மவட்டத்தில் கொவிட் கட்டுப்பாட்டு செயலணியினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
மாவட்ட அரசாங்க அதிபரும் கொவிட் கட்டுப்பாட்டு செயலணியின் தலைவருமாகிய கே.கருணாகரனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக மாவட்டம் பூராகவும் சுகாதாரத்துறையினரும், முப்படையினரும் இணைந்து பல்வேறு விழிப்புணர்பு நடவடிக்கைகள் மற்றும் இறுக்கமான கட்டுப்பாடுகளையும் நடைமுறைப்படுத்தி மாவட்டத்தில் உள்ள அரச நிறுவனங்களில் பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்களுக்கு கொவிட் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதன் அடிப்படையில் இன்று செவ்வாய்க்கிழமை கிரான் பிரதேச செயலகத்தில் பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்களுக்கு கிரான் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் சுகாதார பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது பிரதேச செயலகத்தில் கடமையாற்றுகின்ற உயரதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :