றிஷாட் கைது குறித்து காரைதீவு பிரதேசசபையில் கண்டத்தீர்மானம்!வி.ரி.சகாதேவராஜா-
கிலஇலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீனின் கைது தொடர்பாக காரைதீவு பிரதேசசபையில் இன்று கண்டனத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காரைதீவு பிரதேசசபையின் 39ஆவது மாதாந்த அமர்வு இன்று (12)புதன்கிழமை சபாமண்டபத்தில் சபையின் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் நடைபெற்றபோது மேற்படி பிரேரணை கொண்டுவரப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
அகிலஇலங்கை மக்கள் காங்கிரஸ் மாவடிப்பள்ளி உறுப்பினர் எம்.எஸ்.ஜலீல் கண்டனப்பிரேரணைகொண்டுவந்துரையாற்றுகையில்:
எமது தலைவர் றிசாட்பதியுதீன் சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் முரணானவகையில் நடுநிசியில் சபாநாயகரின் அனுமதியின்றி புனிதரமழான் காலத்தில் கைது செய்யப்பட்டமையை வன்மையாகக்ணடிக்கிறேன். அரக்கத்தனமான இந்த அரசாங்கம் தனது வீழ்ச்சியை சரிக்கட்டமுகமாக தனிப்பட்டதேவைகளுக்காக அவரைக்கைதுசெய்து எவ்வித விசாரணையுமின்றி தடுத்துவைத்துள்ளது.
மேலும் அஷாத்சாலி அஜ்துல்அக்தர் மற்றும் 2500காத்தான்குடி முஸ்லிம் இளைஞர்களையும் வெறுமனே கைதுசெய்து விசாரணையின்றி தடுத்துவைத்துள்ளனர். உடனடியாக சட்டப்படி அவர்கள் விடுதலைசெய்யப்படவேண்டும் என்றார்.
பிரேரணைக்கு ஆதரவாக மாளிகைக்காடு சுயேச்சை உறுப்பினர் எ.ஆர்.எம்.பஸ்மீர் உரையாற்றுகையில்: முஸ்லிம் தலைவர்களை இவ்வாறு சட்டத்திற்குமுரணாக கைதுசெய்யும் இச் சர்வாதிகார அரசாங்கம் இதற்கவகைகூறவேண்டும்.இன்று அவர்கள் நாளை இன்னும் பல தலைவர்கள் கைதாகலாம்.எனவே இச்சபையில் கண்டனப்பிரேரணையை அனைவரும் இணைந்து நிறைவேற்றவேண்டும் என்றார்.
தவிசாளர் கி.ஜெயசிறில் பிரேரணை தொடர்பாகப் பேசுகையில்:
உண்மையில் இது கண்டிக்கப்படவேண்டியது. நாம் ஏகோபித்தமுறையில் ஆதரவுதருகிறோம். இதுபோல கடந்தகாலங்களில் தமிழத்தலைவர்கள் தமிழ் இளைஞர்கள் வகைதொகையின்றி எவ்வித விசாரணையுமின்றி பல்லாண்டுகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இதேபோல முள்ளிவாய்க்கால் படுகொலைச்சம்பவம் போன்ற சம்பங்களுக்கெல்லாம் பெரும்பாலான முஸ்லிம் தலைவர்கள் வாய்மூடி மௌனியாகஇருந்துள்ளர்.
ஆனால் தமிழ்த்தலைவர்கள் அன்றும் சரி இன்றும் சரி. சகோதர முஸ்லிம் சமுகம் பாதிக்கப்படும்போது தொடர்ச்ச்pயாக குரல்கொடுத்து வந்துள்ளதை யாரும் மறக்கவோ மறுக்கவோமுடியாது. எனவே இனிமேலாவது தமிழர்கள் நசுக்கப்படும்போது முஸ்லிம் தலைவர்கள் வெறுமனே கைகட்டி மௌனியாக பார்த்துக்கொண்டிருக்காது குரல்கொடுக்கமுன்வரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். என்றார்.
பிரேரணைக்க தமிழ் முஸ்லிம் 12உறுப்பினர்களும் ஆதவளித்ததால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :