மே18இல் வீட்டிலிருந்தவாறு விளக்கேற்றி அஞ்சலி செலுத்துங்கள்! உலகத்தமிழர்களிடம் காரைதீவு தவிசாளர் ஜெயசிறில் வேண்டுகோள்வி.ரி.சகாதேவராஜா-
லகத்தமிழ் மக்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள். எமது இனத்தின் விடுதலைக்காக உயிர்நீத்த தியாகிகளுக்காக எதிர்வரும் 18ஆம் திகதி பிற்பகல் 18.00மணி 18நிமிடம் 18வினாடியில் அரசின் சட்டதிட்டங்களை மதித்து சுகாதார வழிமுறைகளைப்பின்பற்றி வீட்டிலிருந்தவாறு விளக்கேற்றி ஆத்மாசாந்திக்காய் அஞ்சலி செலுத்துமாறு தயவாய் வேண்டுNகிறேன்.
இவ்வாறு காரைதீவு பிரதேசசபையின் 39ஆவது மாதாந்த அமர்வு இன்று (12)புதன்கிழமை நடைபெற்றபோது சபையின் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் வேண்டுகோள்விடுத்தார்.
குறித்த அமர்வு இன்று சபாமண்டபத்தில் நடைபெற்றபோது அவர் மேலும் பேசுகையில்:
சமகால கொரோனா அசாதாரணநிலைமை காரணமாக எமது சுகாதாரவைத்தியஅதிகாரியின் வேண்டுகோளுக்கமைவாக இன்றுமுதல் வெளியூர் அங்காடி வியாபாhரிகளுக்கு தடைவிதிக்கிறது இச்சபை.
வருமானம் குறைந்த சபையாக எமது சபை இருந்தபோதிலும் எமது முயற்சியினால் 20லட்சருபா இருப்போடு இருப்பது மகிழ்ச்சிதருகிறது. எனினும் எமக்கு கல்முனை மாநகரசபையிடமிருந்து பலலட்சருபா தருமதி இருக்கிறது. இன்றோநாளையோ கிடைக்கக்கூடும் என மேயர் கூறியிருக்கிறார். அதுவந்தால் உறுப்பினர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்யலாம் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :