திருகோணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் பரவல் தீவிரமடைந்த காரணத்தால் திருகோணமலை மாவட்டத்தில் உவர்மலை மற்றும் அன்புவெளி புரம் ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகள் இன்று(1) மாலை 6.00 மணி முதல் முடக்கப்பட்டன.
இதனால் குறித்த பகுதியினை வதிவிடமாகக் கொண்டவர்கள் மாத்திரம் உள் நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
முடக்கப்படுவதாக முன்னரே அறியத்தராத காரணத்தால் பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளானதோடு இன்று தொழிலாளார் தின விடுமுறை ஆகையால் பல கடைகளும் மூடப்பட்டிருந்தன. இதன் காரணாமாக மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதில் சிரமமான நிலையும் ஏற்பட்டிருந்தது.

0 comments :
Post a Comment