ஓட்டமாவடியில் மருந்தகங்கள் தவிர்ந்த வியாபார நிலையங்களையும் மாலை 6.00 மணியுடன் மூடல்எஸ்.எம்.எம்.முர்ஷித்-
நாட்டில் ஏற்பட்டு கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் காணப்படும் மருந்தகங்கள் தவிர்ந்த அனைத்து வியாபார நிலையங்களையும் மாலை 6.00 மணியுடன் மூடுமாறு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான கொரோனா செயலணி கூட்டம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற போதே கிழக்கு மாகாண ஆளுனரின் வேண்கோளின் படி மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எனவே நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் எமது பிரதேச மக்களின் பாதுகாப்பு கருதி வர்த்தகர்கள் மருந்தகங்கள் தவிர்ந்த அனைத்து வியாபார நிலையங்கள், அங்காடி வியாபாரிகள் மாலை 6.00 மணியுடன் மூடி கொரோனா பாதுகாப்புக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டுகின்றோம். மருந்தகங்கள் இரவு 9.00 மணியுடன் மூடுமாறும் வேண்டுகின்றோம்.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்காத வகையிலும், பிரசேத்தினை முடக்காத வகையிலும் தாங்கள் வழங்கும் ஒத்துழைப்பு மூலமே மேற்கொள்ள முடியும் என்றும், இதனை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருபவர்களும், மாவட்டத்தினை விட்டு வெளியேறுபவர்களும் மாவட்டத்தின் எல்லையில் அமைக்கப்படும் சோதனைச் சாவடியில் பதிவு செய்து அன்டிஜன் பரிசோதனையின் பின்னர் அனுமதிக்கப்படும் என்றும், மட்டக்களப்பு மாவட்டத்தினை விட்டு வெளி மாவட்டங்களுக்கு செல்வதை அதிகமாவரை தவிர்த்துக் கொள்ளுமாறும் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :