பேராபத்தை எதிர்நோக்கியுள்ள இலங்கை! நேற்று 46பேர் பலி:மொத்தம் 161242 பேருக்கு தொற்று. கிழக்கில் 108பேர் மரணம்:7281பேருக்கு தொற்று



வி.ரி.சகாதேவராஜா-
லங்கை கொரோனா வைரஸின் அசுரவேக தாக்குதலால் நிலைகுலைந்து போயுள்ளது. என்றுமில்லாதவாறு நாடு நெருக்கடி மிகுந்த சூழலில் சிக்கியுள்ளது. நிலைமை வரவர மோசமாகின்றது. தற்போது அமுலிலுள்ள பூரண முடக்கம் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4மணிக்கு தளர்த்தப்படுமென அரசாங்கம் அறிவித்துள்ளது. உண்மையில் இது நாட்டின் நெருக்கடிநிலையை துல்லியமாக சுட்டிக்காட்டுகின்றது.
இந்நிலையில் நாடு முழுவதையும் 14நாட்களுக்கு முழுமையாக முடக்கிவைக்குமாறு இலங்கை மருத்துவர் சங்கத்தின் தலைவர் விசேடவைத்தியநிபுணர் பத்மா குணரத்ன அரசிடம் அவசர கோரிக்கைவிடுத்துள்ளார்.
அதற்கு பதிலளிக்குமாப்போல் நாட்டை அவ்விதம் 14நாட்களுக்கு முடக்கமாட்டோம் என இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான கயிறிழுத்தல் நிலைமை இவ்வாறிருக்க நேற்றுமுன்தினம் (21) மட்டும் நாட்டில் 3443பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுவரைகாலத்தில் ஏற்பட்ட தொற்றுக்களில் ஒருநாளில் ஏற்பட்ட அதிகூடிய தொற்று இதுவென்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இத்தொற்றுடன் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 1லட்சத்து 61ஆயிரத்து 142பேர் என புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
இது இவ்வாறிருக்க நேற்று மற்றுமொரு உச்சக்கட்டப் பதிவு இடம்பெற்றுள்ளது. அதாவது ஒரேநாளில் சம்பவித்த அதிகூடிய மரணங்களாக மொத்தம் 46பேர் நேற்று பலியாகிய சம்பவம் பதிவாகியுள்ளது. இத்துடன் மரணங்களின் எண்ணிக்கை 1178ஆக அதிகரித்துள்ளது.

தடுப்பூசி போடும் செயற்றிட்டத்தின்கீழ் முதலாம் கட்டமாக இதுவரை 14லட்சத்து 23ஆயிரத்து 566பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
நாட்டின் நிலைமை இவ்வாறிருக்க கிழக்குமாகாணத்தின் நிலைமை அதற்கு சளைக்காத வகையில் ஏட்டிக்குப்போட்டியாக உள்ளது.

கிழக்கில் தொற்றுக்களின் எண்ணிக்கை 7000ஜ தாண்டி 7365ஆக எகிறியுள்ளது. திருமலை மாவட்டத்தில் 2664பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1782பேரும் அம்பாறை பிராந்தியத்தில் 1305பேரும் கல்முனைப்பிராந்தியத்தில் 1614பேரும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதில் மூன்றாவது அலையின்போது 3500பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இதேவேளை கிழக்கில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை100ஜ தாண்டியுள்ளது.அதாவது (23) வரை 108பேர் பலியாகியுள்ளனர். இந்த 108பேரில் 82பேர் இறுதி மூன்றாவது அலையின்போது மரணித்தவர்கள் என மாகாண சுகாதாரத்திணைக்கள புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.

நிலைமை இவ்வாறிருக்க காத்தான்குடிப்பகுதியிலுள்ள பள்ளிவாசல்கள் அனைத்தும் முற்றாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. மட்டு.மாவட்டத்தில் மேலும் கல்குடாப்பகுதியில் சில கிராமசேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களாக சுய கட்டுப்பாட்டுடன் சுகாதாரவிதிமுறைக்கமைவாக காலத்தை கவனமாகக்கழிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்பதை அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.














இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :