கிழக்கில் 3வது அலையில் இதுவரை 1193பேருக்கு தொற்று! திருகோணமலை628 அம்பாறை 402 மட்டக்களப்பு142கல்முனை 21வி.ரி.சகாதேவராஜா-
கிழக்கு மாகாணத்தில் கொரோனா மூன்றாவது அலையில் இதுவரை(3) 1193பேருக்கு கொரொனாத்தொற்று ஏற்பட்டுள்ளதாக கிழக்குமாகாண சுகாதாரத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த இரு அலைகளின்போதிருந்த மாவட்ட தொற்றுநிலை தலைகீழாக மாறி திருகோணமலை அதிகூடிய தொற்றையும் அதிகுறைந்த தொற்றை கல்முனைப்பிராந்தியமும் கொண்டுள்ளது.

கிழக்கில் கொரோனா முதல் அலையில் 23பேரும் இரண்டாவது அலையில் 3645பேரும் தொற்றுக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை மாவட்டத்தில் அதிகூடிய 628 பேரும் அம்பாறைப்பிராந்தியத்தில் 402 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 142 பேரும் கல்முனைப்பிராந்தியத்தில் 21 பேரும் தொற்றுகுள்ளாகியுள்ளனர்.

கிழக்கில் 3வது அலையில் இதுவரை 09பேர் மரணித்துள்ளனர்.திருமலைமாவட்டத்தில் உப்புவெளியில் மூவரும் திருமலையில் மூவரும் மூதூரில் இருவரும் அம்பாறையில் உகனயில் ஒருவருமாக மொத்தம் 09பேர் மரணித்துள்ளனர்.

கடந்த 24மணிநேரத்தில் 95பேருக்கு தொற்று எற்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் அதிகூடிய 42 பேரும் அம்பாறைப்பிராந்தியத்தில் 26 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 26 பேரும் கல்முனை பிராந்தியத்தில் ஒருவருமாக தொற்றுகுள்ளாகியுள்ளனர்.


கிழக்கிலுள்ள 08 சிகிச்சைநிலையங்களில் தற்போது 736பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர் எனப்து குறிப்பிடத்தக்கது.

Attachments area


ReplyReply allForward
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :