யாழ்ப்பாணம்- தையிட்டி பகுதியில் சட்டவிதிமுறைகளை மீறி இரகசிய முறையில் நடைபெற்ற திருமண வைபவத்தில் கலந்துகொண்ட 21பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட தையிட்டி பகுதியில் இந்த திருமண நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக அறிந்த சுகாதார பிரிவினர், திருமண நிகழ்வில் பங்குப்பற்றி இருந்த மணமக்கள் குடும்பம் உள்ளிட்ட ஏனைய சிலரை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தினர்.
அதில் சிலருக்கு மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவில் 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

0 comments :
Post a Comment