சீன பாதுகாப்பு அமைச்சரின் வாகன தொடரணியை எதிர்த்த நபர் கைது!





J.f.காமிலாபேகம்-
சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் பெங் உள்ளிட்ட குழுவினரை சிறப்பு வாகனத் தொடரணியில் சென்றபோது அதற்கான வீதிகளை பொலிஸார் மூடியமைக்கு எதிராக செயற்பட்ட இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் பத்தரமுல்லை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், அவுஸ்திரேலியாவில் கடந்த பல வருடங்களாக அவர் தொழில் புரிந்துவந்தவர் எனக் கூறப்படுகின்றது.

குறித்த நேரத்தில் பொலிசார் வாகனங்களை இடைநிறுத்தியதால் தாம் அசௌகரியங்களை எதிர்கொண்டதாக ஏனைய வாகன சாரதிகள் வாய்மொழி மூலம் கூறுவதாக,சந்தேக நபரினால் எடுக்கப்பட்ட காணொளியொன்றும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

31 வயதுடைய நபர் நேற்று இரவில் பொறளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருப்பதுடன், இன்று நீதிமன்றிலும் ஆஜர்படுத்தப்படவுள்ளார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :