தமண பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளராக Y. ராசித் அவர்கள் இன்று 25.03.2021 வியாழக்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். அம்பாறை மாவட்ட செயலாளரினால் வழங்கப்பட்ட உதவிப் பிரதேச செயலாளர்களுக்கான உள்ளக இடமாற்ற கட்டளைக்கிணங்க இவ்விடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை நிருவாக சேவை உத்தியோகத்தரான இவர், நேற்றைய தினம் தனது ஆரம்பக் கடமை நிலையமான பொத்துவில் பிரதேச செயலகத்திலிருந்து முறையான விடுவிப்பை பெற்றுக் கொண்டார்.
பேராதனைப் பல்கலைக்கழக கலைத்துறைப் பட்டதாரியான திரு. Y.ராசித் அவர்கள் இதற்கு முன்னர் சிங்கள மொழிப்பாட ஆசிரியராக கடமையாற்றியுள்ளதோடு இலங்கை குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரம் பெற்ற உத்தியோகத்தராகவும் பணியாற்றியுள்ளார்.
புதிய உதவிப் பிரதேச செயலாளரின் கடமையேற்பு நிகழ்வில் பொத்துவில் பிரதேச செயலக கணக்காளர் A.B.அப்துல் ரஹ்மான், தமன பிரதேச செயலக கணக்காளர் A.K.அஸ்ஹர், லாகுகல பிரதேச செயலக கணக்காளர் S.M. ஹாறூன், பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் சிரேஷ்ட மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் M.M. ரிம்சான், தமன பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் I.L.M. ரஸ்ஸாக், தமன பிரதேச செயலக நிருவாக கிராம அலுவலர் L.P.G.S. புஷ்பகுமார, பொத்துவில் பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் M.S.M.சுபைர், நிருவாக கிராம அலுவலர் I.L.M.சுபைர் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

0 comments :
Post a Comment