நாடாளாவிய ரீதியில் வயது கட்டுப்பாடின்றி நடத்தப்பட்ட இப்போட்டியில் 40க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இவர்களில் முதல்சுற்றில் 15பேர் தெரிவு செய்யப்பட்டு அவர்களில் முதலாம் இடத்தை ஹட்டனைச் சேர்ந்த மாரிமுத்து சிவகுமாரும் இரண்டாம் இடத்தை கல்கிசையைச் சேர்ந்த றிம்ஷா முகம்மதுவும் மூன்றாம் பரிசை கொழும்பைச் சேர்ந்த தெரேசா இந்திராணியும் பெற்றுக் கொள்ள வுள்ளனர்.
இவர்களுக்கான பரிசளிப்புவிழா எதிர்வரும் 28.03.2021ஆம் திகதி ஞாயிறன்று கதிரேசன் வீதி. கொழும்பு -11 இல் அமைந்துள்ள ஸ்ரீ கதிரேசன் மண்டபத்தில் மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
முன்னாள் உதவி பொலிஸ் மா அதிபர் கே. அரசரட்ணம் தலைமையில் நடை பெறும் இந்நிகழ்வினில், பிரதம அதிதியாக புரவலர் புத்தகப் பூங்க நிறுவனர் ஹாசிம் உமர், மற்றும் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்தப் போட்டித்தொடரின் எதிர்வரும் மாதங்களுக்கான நிகழ்வுகளாக ஏப்ரல் மாதத்தில் கட்டுரை எழுதும் போட்டியும் மே மாதத்தில் குறுநாடகம்(30 நிமிடப்;) பிரதி எழுதும் போட்டியும் ஜூன் மாதத்தில் நெடு நாடகம்(ஒரு மணி) பிரதி எழுதும் போட்டியும் நடைபெறவுள்ளன. ஆர்வம் உள்ளவர்கள் இப்போதே தம்மை தயார்ப டுத்திக் கொள்ள முடியும்.

0 comments :
Post a Comment