கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் யூ.எல்.அஹ்மட் லெப்பை தனது உப தவிசாளர் பதவியை திங்கட்கிழமை (22) இராஜினாமா செய்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற பிரதேச சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஊடாக யூ.எல்.அஹ்மட் லெப்பை தெரிவு செய்யப்பட்டார்.
சுழற்சி முறையில் உறுப்பினர்களை நியமிப்பது என்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானத்துக்கு அமைவாக, ஏ.எச்.நுபைல் என்பவருக்கு விட்டுக்கொடுப்பு செய்யவே தான் இராஜினமா செய்துள்ளதாக யூ.எல்.அஹ்மட் லெப்பை தெரிவித்தார்.
இராஜினாமா செய்யும் நிகழ்வில், புதிய உறுப்பினராக பதவியேற்கவுள்ள ஏ.எச்.நுபைல், வாகரை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம்.தாஹிர், ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஊழியர் ஏ.எல்.பைரூஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment