கிழக்கு இளைஞர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் "ஆளுமையுள்ள பெண் தலைமைகளை உருவாக்குவோம்" எனும் தொனிப்பொருளிலான சர்வதேச மகளிர் தினம்



எம் என்.எம்.அப்ராஸ், ஐ. எல்.எம்.நாஸிம்-
கிழக்கு இளைஞர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் "ஆளுமையுள்ள பெண் தலைமைகளை உருவாக்குவோம்" எனும் தொனிப்பொருளிலான சர்வதேச மகளிர் தின நிகழ்வும், சாதனைப் பெண்கள் கெளரவிப்பும் சம்மாந்துறை தனியார் விடுதியில் இன்று (08) நடைபெற்றது.

கிழக்கு இளைஞர்கள் அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் தானிஷ் றஹ்மத்துள்ளாஹ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக ஜே.ஜே. பவுண்டேஷன் அமைப்பின் ஸ்தாபகரும் கொலன்னாவ ஜும்மா பள்ளிவாசல் தலைவர் கலாநிதி ஐ. வை.எம்.ஹனிப் அவர்கள் கலந்து கொண்டதுடன் கெளரவ அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா அவர்களும் விசேட பேச்சாளராக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை கலாச்சார பீட பீடாதிபதியும் பேராசிரியருமான ரமீஸ் அபூபக்கர் அவர்களும் சிறப்பு அதிதிகளாக சம்மாந்துறை பொலில் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் டி.ஜனோசன், கல்முனை வலய உதவி கல்வி பணிப்பாளர் திருமதி நஸ்மியா சனுஸ், சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியால பிரதி அதிபர் திருமதி றிப்கா அன்சார், கிழக்கு இளைஞர் அமைப்பின் ஆலோசகரும் சமூக சேவையாளர் எஸ்.எல்.ஏ.நாசர் அமைப்பின் உறுப்பினர்கள், துறைசார் பெண் கலைஞர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்

மேலும் இதன் போது சாதனைப் பெண்களாக மிளிரும் பலர் கெளரவிக்கப்பட்டதுடன் கலந்து கொண்ட அதிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் மற்றும் அமைப்பின் நிர்வாக உறுப்பினர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :