ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளராக றிஸ்கான் முகம்மட் நியமனம்!



க்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச அவர்களினால் கே.ஆர்.றிஸ்கான் முகம்மட்
அவர்களுக்கு இன்று (08/03/2021) கட்சி தலைமையகத்தில் வைத்து குறித்த
நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர். ரஞ்சித் மத்தும பண்டார,ஐக்கிய இளைஞர் சக்தியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்.மயந்த திஸாநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இன் நியமனத்தின் மூலம் எதிர்காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு பல்வேறு நலன் சார்ந்த திட்டங்கள் முன் எடுப்பது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரிடம் றிஸ்கான் முகம்மட்
கலந்துரையாடினார்.
அத்துடன் இவர் முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் அவர்களின் அம்பாரை மாவட்ட இணைப்பாளராக கடமையாற்றிய காலத்தில் இளைஞர்களுக்கு பல்வேறு நலன்சார் திட்டங்களை முன்னெடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :