இது தொடர்பில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் அவர்களின் பணிப்பில் சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய மயில்வாகனம் உதயகுமார் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
அந்த அறிக்கை வருமாறு,
"இலங்கையில் சுமார் 250ற்கும் மேற்பட்ட அப்பாவி மக்களின் உயிர்களை காவுகொண்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொழிலாளர் தேசிய சங்கம் வன்மையாக கண்டித்து வந்திருக்கிறது. இந்த தாக்குதலில் மலையகத்தைச் சேர்ந்த உறவுகளும் பலியாகினர். தாக்குதலுடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் நிச்சயம் கண்டறியப்பட வேண்டும். எனினும் அந்த எதிர்பார்ப்பு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முழுமையாக ஈடுசெய்யப்படவில்லை.
விசாரணை அறிக்கையில் திருப்தி இல்லை என பல தரப்பினரும் அறிவித்துள்ளனர். எமது நிலைப்பாடும் அதுவே. இந்த கொடூர தாக்குதலின் பின்னணியில் இருந்து செயற்பட்ட சூத்திரதாரிகள் நிச்சயம் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அதனை வலியுறுத்தி கத்தோலிக்க சபை அறிவித்துள்ள கருப்பு ஞாயிறு அறிவிப்பை நியாயமான ஒன்றாக நாம் கருதுகிறோம். அதனால் தொழிலாளர் தேசிய சங்கம் என்ற அடிப்படையில் இந்த அறிவிப்பிற்கு முழு ஆதரவையும் தெரிவிக்கிறோம்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதோடு தாக்குதலுடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும் நாம் உறுதியாக உள்ளோம்."
மயில்வாகனம் உதயகுமார் - பா.உ
பிரதித் தலைவர் - தொழிலாளர் தேசிய சங்கம்

0 comments :
Post a Comment