ஓட்டமாவடியில்; இரண்டாவது நாளாகவும் ஜனாசாக்களை அடக்கம் செய்யும் பணி



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
கொவிட் 19காரணமாக உயிரிழந்த ஜனாசாக்களை அடக்கம் செய்யும் பணி இரண்டாவது நாளாகவும் ஓட்டமாவடி பிரதேசத்தில் முன்னெடுக்கப்படுகிறது. இன்றைய தினம் இதுவரை மாளிகாவத்தை பகுதியை சேர்ந்த ஒருவரது ஜனாசாவும்,

நித்தம்புவ பகுதியை சேர்ந்த மூன்று ஜனாசாக்களும், கஹட்டோவிட்ட பகுதியை சேர்ந்த ஒருவரதும், பம்மன்ன மற்றும் திஹாரிய பகுதிகளை சேர்ந்த தலா ஒருவரது ஜனாசாக்களுமாக 7 ஜனாசாக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், தற்போது அநுராதபுரத்தில் இருந்து ஒரு ஜனாசா அண்மித்துள்ளதுடன் , கண்டி மாவட்டத்தில் மேலும் 4 ஜனாசாக்களும் இன்று மாலை அங்கிருந்து புறப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

அதன் பிரகாரம் இன்றைய தினம் ஏற்கனவே அடக்கப்பட்ட 8 ஜனாசாக்களுடன் சேர்த்து 12ஜனாசாக்கள் அடக்கம் செய்யப்படும் என எதிர்பார்ப்பதாக முன்னாள் அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா அங்கிருந்து தெரிவித்தார்.

குறித்த பணிகளில் மௌலானா அவர்கள் தொடர்ந்தும் ஆரம்பம் முதலே செயற்பட்டு வருவதுடன் இரண்டாவது நாளான இன்றைய தினமும் களத்தில் நின்று உறவுகளது துயரில் பங்கெடுப்பது குறிப்பிடத்தக்கது.

ஓட்டமாவடி சூடுபத்துனசேனை பகுதியில் நேற்றைய தினம் 9ஜனாசாக்களும் , இன்றைய தினத்தில் இதுவரை அடக்கப்பட்ட7 ஜனாசாக்களையும் சேர்த்து 16 ஜனாசாக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் , அடக்கம் செய்யும் பணி இன்று இரவு வரை தொடர உள்ளதாகவும் களத்தில் செயலாற்றும் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :