அந்-நூரை அழகுபடுத்துவோம் எனும் தொனிப்பொருளில் பழைய மாணவர் சங்கத்தினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு






றீஸ்மத்-

ட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயத்தின் சுற்றுப்புறச் சூழலை சுத்தம் செய்து, அழகுபடுத்தும் நோக்கில் அப்பாடசாலை பழைய மாணவர் சங்கத்தினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

பாடசாலையின் பழைய மாணவர்களின் ஒத்துழைப்புடன், முன்னெடுக்கப்பட்டுவரும் இவ்வேலைத்திட்டத்தின் முதற்கட்ட பணியாக, பாடசாலை சுற்றுமதில் நிறம் பூசப்பட்டு அழகுபடுத்தப்பட்டு வருகிறது. அத்துடன் பாடசாலை வளாகத்தில் நிழல் தரும் மரங்கள் மற்றும் பூ மரங்கள் என்பன நடப்பட்டு வருகிறது.

குறித்த வேலைத்திட்டத்தினை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு (28) பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் எப்.ஹலிம் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் போது பாடசாலை அதிபர் ஏ.எம்.அஸ்மி, அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.ஹசன், அல்-நஜா விளையாட்டுக்கழகத்தின் உப தலைவர் எஸ்.எல்.முசம்மில் உள்ளிட்ட பழைய மாணவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

பாடசாலை அதிபர், ஆசிரியர்கள்களின் ஆலோசனையுடனும், பழைய மாணவர்களின் பூரண ஒத்துழைப்புகளுடனுமே குறித்த வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் எப்.ஹலிம் தெரிவித்துள்ளார்.

பழைய மாணவர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் இப்பணியினை பாடசாலை சமூகத்தினர் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :