அடக்க விட்டாலும் ஆயிரத்தெட்டு நிபந்தனைகள் போடுவார்களே.
இதோ. அந்த நிபந்தனைகள் என தன் கனவில் கண்டதாக ஒரு கிறுக்கன் எழுதினான்.
அவன் கிறுக்கன் என புரியாத மகா கிறுக்குகள் அச்செய்தியை உண்மை என பரப்பின.
பின்னர் அரசு இரணதீவு என சொல்லி அதற்கும் எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கண்ட நாயெல்லாம் தமிழ், முஸ்லிம் ஒற்றுமை பீத்தினான்.
இவை அனைத்தும் நடந்த போதும் ஜனாதிபதியும் பிரதமரும் அமைதியாக காரியம் செய்தனர். அவர்களின் உத்தரவுகள் மிகச்சரியாக நடந்தன. ஜனாஸாக்களும் அடக்கப்படுகின்றன.
எதிர்காலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அடக்கம் செய்ய அனுமதிக்கப்படும் என்ற நம்பிக்கை எமக்குண்டு.
கடந்த ரணில், சஜித் அரசில் ஒரு ரதன தேரரின் ஆர்ப்பாட்டத்துக்கு பயந்து முஸ்லிம் கவர்ணர்மாரும், அமைச்சர்மாரும் ராஜினாமா செய்தனர். அந்தளவுக்கு முதுகெலும்பற்ற ஆட்சியே இருந்தது.
இந்த ஆட்சியில் வர்த்தமாணி வந்தபின்னரும் அடக்க கூடாது என இனவாதிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஊடகங்களில் கத்தினர்.
அரசு அசையவில்லை. மிகச்சரியாக செய்ததது. சிங்கள பொது மக்களும் அமைதியாக இருந்தனர்.
ராஜபக்ஷாக்கள் இந்த நாட்டை நேசிப்போர். அவர்கள் செய்வது சரியாக இருக்கும் என்பதை பெரும்பாலான சிங்கள மக்கள் தெரிந்து வைத்துள்ளனர்.
மஹிந்த ராஜபக்ஷ தமிழீழத்தை கொடுத்தாலும் பெரும்பாலான சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதை நான் பல தடவை சொல்லியுள்ளேன். அந்தளவுக்கு அவர் இந்த நாட்டுக்காக தியாகம் செய்தவர்.
இப்போது ஜனாஸாவை வைத்து அரசியல் செய்தோரின் வாய்கள் மூடப்பட்டு விட்டன.
இனியாவது மௌனனாக இருங்கள்.
இனவாதிகளுக்கு தீனி போடும் செயலை செய்யாதீர்கள்.
உண்மையில் ஜனாதிபதி கோட்டாவும் பிரதமர் மஹிந்தவும் மனசு வைத்தால் இந்த நாட்டில் சகல இனவாதங்களும் ஒழிக்கப்பட்டு அமைதி நிலவும்.
அவரவர் அவரவர் எல்லைக்குள் இருந்தால் போதும். அடுத்தவன் வீட்டுக்குள் புகுந்து இது என்னோட இடம் என்பதும், இது எங்கள் பூமி என்பதும், ஒரு இனத்தை இன்னொரு இனம் அடக்கியாள முனைவது, அடுத்தவன் சமயத்தை அவமதித்தல், அடுத்த சமய சட்டங்களுக்குள் மூக்கை நுழைத்தல் போன்றவற்றை செய்வோருக்கெதிராக உறுதியாக நடவடிக்கை எடுப்பதன் மூலம் இந்த நாட்டை நிச்சயம் சிங்கப்பூராக்க முடியும்.
அதற்குரிய முழு தகுதியும் ராஜபக்ஷ குடும்பத்துக்கு மட்டுமே உண்டு.
முபாறக் அப்துல் மஜீத்
உலமா கட்சி
0 comments :
Post a Comment