இடமாற்றம் பெற்றுச் செல்லும் சாய்ந்தமருது பிரதேச செயலாளரை பாராட்டி கெளரவிப்பு!



நூருல் ஹுதா உமர்-
சாய்ந்தமருது பிரதேச செயலாளராக கடந்த மூன்று வருடங்களாக கடமையாற்றி தற்பொழுது இடமாற்றம் பெற்று செல்லும் ஐ.எம். றிகாஸ் அவர்களை சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் கிராம உத்தியோகத்தர் நலன்புரி ஒன்றியத்தின் சார்பாக பாராட்டி கெளரவிக்கும் பிரியாவிடை விருந்துபசார நிகழ்வு சாய்ந்தமருது கிராம உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் கல்முனை பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் வியாழக்கிழமை (4) நடைபெற்றது.

கடந்த மூன்று வருடங்களாக சாய்ந்தமருது பிரதேச செயலாளராக கடமையாற்றிய ஐ.எம்.றிகாஸ் அவர்கள் தனது நியமனக் காலத்தில் ஆளுமையாகவும், நேர்த்தியாகவும், நேர்மையாகவும் கரைபடியாக் கரத்தோடு சேவைபுரிந்ததை கிராம உத்தியோகத்தர்கள் சுட்டிக்காட்டியதோடு அவர்களின் எதிர்கால முயற்சிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து இந்நிகழ்வில் நினைவுச்சின்னம் மற்றும் அன்பளிப்புகள் வழங்கியும் கெளரவித்தனர்.

இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.முவஃபிகா நிர்வாக கிராம உத்தியோகத்தர் ஏ.எல்.ஜஃபர் சக கிராம உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டு இடமாற்றம் பெற்றுச் செல்லும் பிரதேச செயலாளரின் சேவைகளை பாராட்டி கெளரவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :