அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்டெடன் தோட்ட தேயிலை மலைப்பகுதியில் ஆணின் சடலமொன்று 05/02/2021 மதியம் மீட்கப்பட்டுள்ளது.
ரொசல்ல ரயில் நிலையத்தை அன்மித்த பகுதியில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் சடலமொன்று இருப்பதை கண்டு அட்டன் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கமையவே பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
மாநிறம் ( Brown) சேர்ட்டும் வெள்ளை நிறம் சாரமும் அணிந்திருந்த உருகுலைந்த நிலையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் இதுவரையில் யாரென அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
அட்டன் மாவட்ட நீதவான் சடலத்தை பார்வையிட்ட பின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியலைக்கு கொண்டு செல்லவுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment