கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் உடல்களை, மட்டக்களப்பு - ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மஜ்மா நகர் கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட காணியில் இன்று மதியம் 02 ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டன.
ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தலைமையில் நேற்றிரவு இடம்பெற்ற கூட்டத்திற்கமைய இவ்வேற்பாடுகள் இடம்பெற்றன.
அந்தவகையில் ஓட்டமாவடி - மஜ்மா நகர் காணியில் முதற் காட்டமாக பத்து குழிகள் தோண்டப்பட்டதுடன் அதில் இருவரின் ஜனாஸாக்களே இராணுவ பாதுகாப்புக்கு மத்தியில் சற்று முன்னர் அடக்கம் செய்யப்பட்டதுடன் மீதமுள்ள ஜனாஸாக்களும் அடக்கம் செய்யப்படும் என்று எமது செய்தியாளர் இம்போட்மிரருக்குத் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment