ஐ. ஏ. காதிர் கான்-
புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய இரசாயனம் அடங்கிய தேங்காய் எண்ணெய்யை இறக்குமதி செய்த
மூன்று நிறுவனங்களை சீல் வைப்பதற்கு, நுகர்வோர் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
குறித்த தேங்காய் எண்ணெய் நுகர்வுக்குப் பொறுத்தமற்றதென, மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின்போது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, அவற்றை மீள் ஏற்றுமதி செய்யும் வரையில் அந்த மூன்று நிறுவனங்களுக்கும் சீல் வைத்துள்ளதாக, நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.
இருப்பினும், சம்பந்தப்பட்ட தேங்காய் எண்ணெய் சந்தைக்கு வெளியிடப்படவில்லை என்றும், அதிகார சபை அறிவித்துள்ளது. எனினும், நுகர்வோர் விவகார ஆணையம், நுகர்வுக்குத் தகுதியற்ற புற்று நோய்களைக் கொண்ட தேங்காய் எண்ணெய் சந்தைக்கு விடப்பட்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களைக் கருத்தில் கொண்டு, தேங்காய் எண்ணெய்யின் மாதிரிகள், (26) முதல் நாடு முழுவதும் உள்ள கடைகளிலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
0 comments :
Post a Comment