வாடகைக்கு பெற்றுக்கொள்ளும் வாகனங்களுக்கு, போலி ஆவணங்களை தயாரித்து, வாகனங்களை குறைந்த விலையில் விற்பனை செய்வதில் ஈடுபட்ட இரண்டு சந்தேகநபர்களை மேல் மாகாண புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
முல்லேரியாவ மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேகநபர்கள் மேலும் 17 குற்றச் செயல்களுடன் தொடர்புப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, மாத்தறை, அநுராதபுரம் மற்றும் மன்னார் பகுதிகளில் மூன்று மோட்டார் சைக்கிள் கொள்ளை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
தங்காலை பகுதியில் முச்சக்கரவண்டியொன்றும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வாகனங்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 comments :
Post a Comment