காணியை மீட்க்க பெளத்த மதகுருக்கள் நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்திற்கு விஜயம்!

பாறுக் ஷிஹான்-

ம்பாறை மாவட்டம் நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்திற்கு பெளத்த மதகுருமார் விஜயம் செய்துள்ளனர்.

நேற்று(20) மாலை நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்தில் காணப்படும் இந்து மக்களின் மயான நிலத்தை மீண்டும் மீட்டுக்கொடுப்பதாக அங்குள்ள மக்களின் வேண்டுகோளிற்கு இணங்க அவர்கள் அங்கு சென்றுள்ளனர்.

குறித்த பகுதிக்கு கடும் பாதுகாப்புடன் வருகை தந்த பெளத்த மதகுருமார் இவ்விடயம் தொடர்பில் மக்களுடன் கலந்து ஆலோசனை மேற்கொண்டிருந்தனர்.

அத்துடன் அப்பகுதி மக்களுக்கு மீண்டும் குறித்த மயான நிலத்தை பெற்று கொடுப்பதற்கு முயற்சிப்பதாகவும் தமிழ் சிங்கள மக்கள் எல்லோரும் ஒரே இனம் என்று அங்கு உரையாற்றும் போது முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடங்களில் அம்பாறை மாவட்டத்திலுள்ள நிந்தவூர்ப்பிரதேசத்துக்குட்பட்ட அட்டப்பள்ளம் இந்துமயானமானது ஆக்கிரமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அப்பகுதி மக்கள் கிளர்ந்தெழுந்து ஆர்ப்பாட்டத்திலீடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :