தேசிய கல்வியற் கல்லூரிக்கான நேர்முகப்பரீட்சை



எம்.ஜே.எம்.சஜீத்-
தேசிய கல்வியற் கல்லூரிக்கு புதிதாக அனுமதிக்கப்படவுள்ள ஆசிரிய பயிலுனர்களுக்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 14 ஆம் 15 ஆம் திகதிகளில் அட்டாளைச்சேனை மத்திய மகா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) நடைபெறும் என அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி திரு. கே. புண்ணியமூர்த்தி தெரிவித்தார்.

இதற்கமைய இஸ்லாம், கணிதம், வணிக கல்வியும் மற்றும் கணக்கீடு ஆகிய பாடநெறிகளுக்கு 100 பயிலுனர்களுக்கான நேர்முகப்பரீட்சை நடைபெறவுள்ளது. இவர்களுக்கான கடிதங்கள் தனித்தனியாக விண்ணப்படிவத்தில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

நேர்முக பரீட்சைக்கு கடிதம் அனுப்பப்பட்டவர்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள சகல ஆவணங்களுடனும் காலை 9 மணிக்கு சமூகமளிக்க வேண்டும்.

2018 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கமைய கல்வியற் கல்லூரிகளுக்கு ஆசிரிய பயிலுனர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் என்று பீடாதிபதி திரு. கே. புண்ணியமூர்த்தி தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :