ஐக்கிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்ட காரியாலய திறப்பு விழாவும், அங்கத்துவ அடையாள அட்டை வழங்கும் நிகழ்வும் புதன்கிழமை (17) சம்மாந்துறையில் இடம்பெற்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் திகாமாடுல்ல மாவட்ட அமைப்பாளர் எம்.ஏ.ஹசன் அலி தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில், அக்கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இம்தியாஸ் பாக்கிர்மாக்கார், பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், இம்ரான் மஹ்றுப் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர்மாக்கார் நாடாவெட்டி காரியாலயத்தினை திறந்த வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர்களுக்கு அங்கத்தவர்களுக்கான அட்டையினை வழங்கி வைத்தனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்ட அமைப்பாளராக ஹசன் அலி நியமிக்கப்பட்டதனையடுத்து, அம்மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களில் கட்சி மீளமைப்பு நடவடிக்கைககள் இடம்பெற்று வருகிறது.
0 comments :
Post a Comment