நோட்டன் பிரிட்ஜ் எம்.கிருஸ்ணா-
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா வனப்பகுதியில் பாரிய தீப்பரவல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் இதனை கட்டுப்படுத்த குறித்த பகுதிக்கு இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் 18.02.2021. புதன்கிழமை இடம்பெற்றது. குறித்த வனப்பகுதிக்கு 17.02.2021. இனந் தெரியதவர்களினால் வைக்கப்பட்ட தீயினால் ஏராளமான ஏக்கர் எறிந்துள்ளதோடு பொதுமக்கள் பொலிஸார் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அதனை தொடர்ந்து மீண்டும் நேற்றைய தினமும் தீபரவல் ஏற்பட்டமையினால் இரானுவத்தினர் வரவழைக்கப்பட்டு தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். வனப்பகுதிக்கு தீ வைக்கப்பட்டவர்கள் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment