சென்னை பத்திரிக்கையாளர் சந்திப்பு மன்றத்தில் நடைபெற்ற இந்நூல் வெளியீடு நிகழ்ச்சியில், பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் முஹம்மது சேக் அன்சாரி நூலை வெளியிட்டார். மாநில பொதுச்செயலாளர் முகைதீன் அப்துல் காதர் முன்னிலை வகித்தார்.
தமிழக முஸ்லிம்களின் கோரிக்கைகள் நூல் குறித்து, மாநிலத்தலைவர் முஹம்மது சேக் அன்சாரி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
தமிழக முஸ்லிம்களின் சமூக-பொருளாதார - அரசியல் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் இந்நூலில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது, குறிப்பாக 'இஸ்லாமோஃபோபியா' எனும் இஸ்லாமிய வெறுப்பு நடவடிக்கைகளுக்கு எதிரான சட்டம் இயற்ற வேண்டும், முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடை உயர்த்த வேண்டும். கல்வி வளாகங்களில் மதவாத செயல்பாடுகளை தடுக்க வேண்டும். வக்ஃபு வாரியம் சீரமைக்கப்படவேண்டும். அரசியல் வழக்குகளை திரும்ப பெறவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. மதசார்பின்மை, ஜனநாயகம், சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றின் மீது நம்பிக்கையுள்ள, பாரதிய ஜனதா கட்சி அல்லாத தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளின் கவனத்திற்கும் 'தமிழக முஸ்லிம்களின் கோரிக்கைகள்' கொண்டு செல்லப்பட்டு அவர்களின் தேர்தல் கால அறிக்கையிலும், தேர்தலுக்கு பின்னுள்ள அவர்களின் செயல் திட்டங்களிலும் எமது கோரிக்கைகள் இடம்பெற வழிவகை செய்வதற்கான முதல் தொடக்கமாக இந்நூலை வெளியிடுகிறோம் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாநில செயலாளர் நாகூர் மீரான், மக்கள் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் அப்துல் ரசாக், சென்னை மண்டல செயலாளர் அஹ்மத் முகைதீன், தென் சென்னை மாவட்ட செயலாளர் முகைதீன் அன்சாரி, வட சென்னை மாவட்ட தலைவர் பக்கீர் முஹம்மது உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
0 comments :
Post a Comment