பொதுமக்களின் நலன் கருதி மறுசீரமைக்கப்பட்ட இரு பிரிவுகள் திறந்து வைப்பு



பாறுக் ஷிஹான்-
ம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் பொதுமக்களின் நலன் கருதி மறுசீரமைக்கப்பட்ட இரு பிரிவுகள் பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதனினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இன்று(8) காலை பல்நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் பிரதேச ஒருங்கிணைப்பு பிரிவு மற்றும் மேலதிக மாவட்ட பதிவாளர் பிரிவு என்பன திறந்து வைக்கப்பட்டன.

இதன் போது பிரதேச ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் எம்.ஐ.எம் பாரீஸ் பங்குபற்றலுடன் பல்நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் பிரதேச ஒருங்கிணைப்பு பிரிவும் மேலதிக மாவட்ட பதிவாளர் பிரிவு மேலதிக மாவட்ட பதிவாளர் பி.நித்தியானந்தன் பங்குபற்றலுடன் பிரதேச செயலாளரினால் திறந்து வைக்கப்பட்டது.

மேலும் பல்நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் பிரதேச ஒருங்கிணைப்பு பிரிவு சுபீட்சத்தின் நோக்கு கொள்கையின் அடிப்படையில் வறிய குடும்பங்களை சேர்ந்த 1 இலட்சம் வேலைவாய்ப்பில் இணைக்கும் திட்டத்தில் முதலாம் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட பயிலுநர்களை பயிற்றுவித்தல் மற்றும் பிரதேச அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்தல் அவசர கால நிலைமைகளின் போது மீட்புபணிகளை முன்னெடுத்தல் என்பனவற்றினை இப்பிரிவு மேற்கொள்கின்றது.

குறித்த நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ஆர்.லதாகரன், கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் மனோஜ் இந்திரஜித் , பிரதேச செயலக கணக்காளர் யூ.எல்.ஜவாஹிர் ,பயிலுநர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :