மன்னார் நானாட்டான் இசைமாலைத்தாழ்வு குளம் புனரமைப்பு அங்குரார்ப்பண நிகழ்வு. மஸ்தான் Mp தலைமையில் இன்று உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைப்பு.



னாதிபதியின் செளபாக்கிய கொள்கையின் கீழ் நாடாளவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் "#நீர்ப்பாசன #செழிப்பு" எனும் 5000 கிராமிய விவசாயக் குளங்கள் மற்றும் அணைக்கட்டுகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் பிரகாரம் மன்னார் மாவட்டத்தில் சுமார் 138 குளங்களை மறுசீரமைப்பு செய்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட இசைமாலைத்தாழ்வுக் குளம் புனரமைப்பு அங்குராப்பண நிகழ்வு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத் தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான கௌரவ #காதர் #மஸ்தான் அவர்களின் தலைமையில் இன்று (08) உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ. ஸ்ரான்லி டி மெல், நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் நாயகம், மன்னார் மாவட்ட பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், நீர்ப்பாசனத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர், கமநல சேவை திணைக்கள மற்றும் நீர்ப்பாசனத் திணைக்கள உயர் அதிகாரிகள், திட்டமிடல் பணிப்பாளர், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் ஆகியோரோடு கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இத்திட்டத்திற்காக சுமார் எட்டு மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :