தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடய கூட்டொப்பந்தத்ததை கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்களின் சிலவும் அடிமை சாசனமாக கருத தொடங்கியுள்ளது என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் கருத்துத் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது :
கூட்டொப்பந்தத்தை அடிமை சாசனமாக விமர்சித்தவர்கள் இன்று அதனை புகழ்வதாக தொழிற்சங்கவாதி ஒருவர் வக்காலத்து வாங்கியுள்ளார்.
இதனை மலையகம் எள்ளி நகையாடுகிறது. கூட்டு ஒப்பந்தத்தைச்சேர்ந்த மூன்று தொழிற்சங்கங்களில் இரண்டு தொழிற்சங்கங்கள் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் அதற்கு தயக்கம் காட்டி வருகின்றன.
அதில் ஒரு தொழிற்சங்கம் கடந்த கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பம் இடவில்லை.
மேலும் ஒரு தொழிற்சங்கம் இம் முறை கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு தயக்கம் காட்டி வருவது மலையகம் அறிந்த விடயம்.
இந்த விடயம் அறிந்தும் கடந்த பொதுத்தேர்தலில் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்ட ஒருவர் கட்சியில் தனது பெயர் அடிபட வேண்டும் என்பதற்காக மலையக மக்களை பிழையாக வழி நடத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளுகின்றேன்.
0 comments :
Post a Comment