இனிமேல் அதிபர் ஆசிரியர்கள் திங்கட்கிழமையில் மட்டுமே அலுவலகம் வரவேண்டும்!



சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் சஹூதுல் நஜீம் தெரிவிப்பு.
வி.ரி.சகாதேவராஜா-
னிமேல் அதிபர் ஆசிரியர்கள் அலுவகத்திற்கு வரவேண்டுமாகவிருந்தால் திங்கட்கிழமையில் மட்டுமே அலுவலகம் வரவேண்டும் என சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீம் தெரிவித்தார்.

சம்மாந்துறை வலய அதிபர்களுக்கான கூட்டம் தாறுஸ்ஸலாம் மகா வித்தியாலய மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.அங்குரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்:
பாடசாலையில் வைபவங்கள் நடாத்துவதை தற்காலிகமாக இடை நிறுத்த வேண்டுமென கல்வி அமைச்சு செயலாளரின் அறிவுறுத்தியுள்ளார் எனவே உடனடியாக அத்தகைய பைவங்களை நிறுத்தவேண்டும்.
கொவிட் 19 பாதுகாப்பு விடயங்களை பாடசாலையில் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவேண்டும் .
பாடசாலை மாணவர்களுக்கான பகல் உணவு சீருடைஇபாதணி வவுச்சர் விநியோகிக்கப்பட்டுள்ளது. தரம் 1 இற்கு உள்ளீர்ப்புச் செய்யப்பட்ட மாணவர்களுக்கு அவர்களது வீடுகளில் நடுவதற்கு வழங்கப்பட்ட பழமரங்களின் முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்கவேண்டும்.
2021-பாடசாலை பௌதீக விபரம் மற்றும் 2021ஆம் கல்வி ஆண்டிற்கான கல்வி அபிவிருத்தி பற்றிய பகுப்பாய்வுச் சுருக்கம் பவர்பொயின்ற சமர்ப்பணம் ஊடாக கலந்துரையாடி அரச பொதுப் பரீட்சைகளின் அடைவு மட்டத்தை அதிகரிப்பதற்கான செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
அதில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :