அட்டாளைச்சேனை கோட்டப்பாடசாலைகளில் இடம்பெற்ற பேடன் பவல் தினமும் மர நடுகையும்.












சா
ரணியத்தின் தந்தை பேடன் பவல் அவர்களின் தினத்தை முன்னிட்டு இலங்கை சாரணியர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு இலட்சம் மர நடுகை செயல்திட்டம் அக்கறைப்பற்று வலய பாடசாலைகளில் இன்று காலை ஆரம்பம் செய்யப்பட்டது.

சாரண உதவி மாவட்ட ஆணையாளரும், சாமாதான தூதுக்குழுவின் மாவட்ட இணைப்பாளரும், சிரேஷ்ட ஊடகவியலாளரும், இவ் செயல்திட்டத்தின் தலைவருமான எம்.எப்.றிபாஸ் தலைமையில் அட்டாளைச்சேனை அரபா வித்தியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட சாரணியர் சங்க தலைவரும், சம்மாந்துறை பிரதேச செயலாளருமான எஸ்.எல்.எம். ஹனீபா அவர்களும்

முன்னால் வலய கல்விப் பணிப்பாளரும், மாவட்ட சாரணியர் சங்கத்தின் தவிசாளருமான யூ.எல். ஹாசிம்
மாவட்ட சாரணர் ஆணையாளர்,
எஸ்.ரவீந்திரன்.
உதவி மாவட்ட சாரணர் ஆணையாளர்களான
எஸ்.எல்.முனாஸ், எம்.ஏ.ஹம்மாத்,  பதக்கச் செயலாளர் செய்னுதீன் அவகளுடன் இபாம்

மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், சாரணர் மாணவர்கள், அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தினுடைய அதிபர் எம்.ஏ.அன்சார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மரநடுகையை தொடர்ந்து சாரண மானவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து மாவட்ட சாரணியர் தலைவர், சாரண மாணவர்களிடம் சிறு உரையாற்றும் போது , இப் பிரதேசத்தில் மீண்டும் சாரணியத்தை புனரமைப்பதோடு நீங்கள் அனைவரும் சிறந்த சாரணர்களாக உருவாகி சாரணியத்துக்கு பல பங்களிப்புக்களை செய்வதோடு உங்களைப் போல் இன்னும் பல சாரணர்களை இந்த பிரதேசத்தில் உருவாக்க வேண்டும். அத்தோடு மட்டுமல்லாமல் நீங்கள் அனைவரும் ஜனாதிபதி சாரணர் விருது வென்று ஜனாதிபதி சாரணர் ஆகவேண்டும் என்று மாணவர்களிடம் தெரிவித்தார்.

இன்றைய நிகழ்வுகள் அட்டாளைச்சேனை அரபா வித்தியாலயம், அல்-அர்ஹம் வித்தியாலயம், அந்-நூர் மஹா வித்தியாலயம், பாலமுனை ஹிக்மா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :