மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸா அம்மக்களின் எதிர்ப்புக்களின் மத்தியில் தகனம் செய்யப்படுகின்றது.-பைசர் முஸ்தபாஅஷ்ரப் ஏ சமத்-

லங்கையில் கொவிட்-19 காரணமாக மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸா அம்மக்களின் எதிர்ப்புக்களின் மத்தியில் தகனம் செய்யப்பட்டு வருகின்றது. இது விடயத்தில் உயர்நீதிமன்றம் ஊடாக உரிமைகளை பெற்றுக்கொள்ளும் விடயத்தில் ஓர் அங்கமாகவே 20 நாட்களேயான சிசுவின் ஜனாஸா பலவந்தமாக  தகனம் செய்யப்பட்ட விடயத்தை நீதிமன்றம் கொண்டு சென்றுள்ளேன்.  என  முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பைசா் முஸ்தபா தொிவித்தாா்.

சிசுவின்  ஜனாஸா தகனம் செய்யபட்டது குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு ராஜகரியவிலுள்ள  அவரது அலுவலகத்தின் வியாழக்கிழமை( 28) நடைபெற்றது.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்:-  

தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் தங்களது சமூகத்தின் பிரச்சினைகளை  பேசுகின்றனா்.  அவா்கள் எதிா்கட்சியில் இருந்தாலும் .  அவர்களது பிரதேசங்களது  அபிவிருத்திகளும் இடம்பெற்று வருகின்றன. இதற்கு முதன்மைக்காரணம் அவர்கள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் சமூகம் சார்ந்த விடயங்களில் அரசியல் வித்தியாசம் இன்றி  கலந்தாலோசித்து ஒற்றுமையாக செயற்பட்டு வருகின்றனர்.

ஆனால் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் பல்வேறு கட்சிகளாக பிரிந்து நின்று தங்களது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காகவே செயல்பட்டு வருகின்றனர். அண்மையில் அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட 20 அரசியல் அமைப்பு வாக்கெடுப்பின்போது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் இரண்டு பிரதான முஸ்லிம் அரசியல் கட்சி தலைவர்களின் உறுப்பினர்கள் தன்னிச்சையாக செயற்பட்டு அரசாங்கத்திற்கு வாக்களித்துள்ளனர்.

இந்நிலையில் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் அவர்களது உறுப்பினர்களும் ஒன்றிணைந்து ஒருதிடமாக ஜனாஸா வியத்தை முன்வைத்தாவது அரசாங்கத்திற்கு வாக்களித்திருக்க முடியும், அவ்வாறு  நடைபெற்றிருந்தால்  வாக்களித்த  முஸ்லிம்கள் அவா்களை மலா் மாலையிட்டு வரவேற்றிருப்பாா்கள். எமது  பாராளுமன்ற உறுப்பினர்கள் தன்னிச்சையகச் சென்று அவர்களது தனிப்பட்ட பிரச்சினைகளை பேசிவிட்டு 20வது அரசியல் திருத்தத்திற்கு வாக்களித்ததுள்ளனா்.
.
முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசாங்கத் தரப்பில் இருந்தாலோ அல்லது எதிர்த்தரப்பில் இருந்தாலோ முஸ்லிம்களின் உரிமைகள் என்று வரும்போது ஒன்றிணைந்து குரல் கொடுக்க முன்வரவேண்டும்.  அவ்வாறில்லாமல் தனிப்பட்ட முறையில் எந்தவொரு முயற்சியை செய்தாலும் பயனற்றதாகவே இருக்கும்.

உலக சுகாதார வழிகாட்டுதலின் பரிந்துரைகளுக்கமைய கொவிட்டினால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கமும் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கொவிட்-19 காரணமாக முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் பலாத்காரமாக எரிக்கப்பட்டு வருகின்றது. இது முஸ்லிம்களுக்கு செய்யக்கூடிய பாரிய மனித உரிமை மீறலாகும். நாம் இலங்கையர்கள் இங்கிருந்துகொண்டு எமது உரிமைகளுக்காக ஜனநாயக ரீதியில் போராடி வருகின்றோம்.
இலங்ககையில் உள்ள முஸ்லிம்களது கொவிட் ஜனாசாவை எரிக்கும்  நடவடிக்கையானது முஸ்லிம் மத கலாச்சார விழுமியங்களை மீறும் செயலாகும்.  இவ் விடய்த்தில் இலங்கையில் வாழும் சகல முஸ்லிம்களும் .   மிகவும் இக்கட்டான நிலைமைக்கு தள்ளப்பட்டு மிகுந்த மனஉழைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.
எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் நாம் எமது மத உரிமைகளை விட்டுக்கொடுக்க முடியாது. இதுவே எனது நிலைப்பாடாகும். 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :