ஒரு வாரகாலமாக விவசாய நிலங்களை சேதப்படுத்திய யானை உயிரிழப்புஎஸ்.எம்.எம்.முர்ஷித்-
வாழைச்சேனை கமநல சேவை திணைக்களத்திற்குட்பட்ட மக்கிளானை பள்ளிமடு விவசாய கண்டத்தில் கடந்த ஒரு வாரகாலமாக விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்த யானை நேற்று வியாழக்கிழமை மாலை இறந்த நிலையில் காணப்பட்டதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த யானை நோய்வாய்ப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும், இது தொடர்பாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட பிராந்திய காரியாலத்திற்கு தெரியப்படுத்தியதாகவும், வைத்திய அதிகாரி வருகை தரும் பட்சத்தில் யானைக்கான வைத்தியத்தினை ஆரம்பிக்க முடியும் என்று கிரான் வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்திருந்த போதும் ஒருவார காலமாக வைத்தியர்கள் எவரும் வராத நிலையில் குறித்த யானை உயிரிழந்துள்ளது.
குறித்த யானை ஒரு வாரகாலமாக பள்ளிமடு விவசாய கண்டத்தில் வயல் நிலங்களை அழித்து செய்கை செய்யப்பட்ட சோளம் மற்றும் கச்சான் என்பவற்றை நாசம் செய்துள்ளதுடன், வயல் காவலாளியின் குடிசையையும் துவம்சம் செய்த யானையே இவ்வாறு உயிரிழந்த நிலையில் காணப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

கிரான் வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகள் குறித்தி இடத்திற்கு வருகை தந்து உயிரிழந்த யானையினை பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :