கொழும்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் குறித்து சுகாதார அமைச்சிற்கும், பொதுசுகாதார பரிசோதகர்களுக்கும் இடையே முரண்பாடுகள் தொடர்கின்றன.
கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றின் வேகம் குறைந்துவிட்டதாக நேற்று கொழும்பில் நடந்த ஊடக சந்திப்பில் உரையாற்றிய சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் சுதத் சமரவீர தெரிவித்திருந்தார்.
எனினும் இதனை முற்றாக மறுத்துள்ள பொதுசுகாதார பரிசோதகர்களின் சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய, கொழும்பில் தொற்றின் அவதானம் அதிகரித்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
விசேடமாக மாளிகாவத்தை, ஆட்டுப்பட்டித்தெரு, டாம் வீதி, மருதானை மற்றும் வேகந்த ஆகிய பிரதேசங்களில் தொற்றின் வேகம் இன்னும் குறையவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பு மாநகர சபையின் எல்லைப் பிரதேசங்களில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டை இழந்து பரவியுள்ளதாக தெரிவிக்கின்ற அவர், மக்களின் ஒத்துழைப்பு கிடைப்பதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

0 comments :
Post a Comment