கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களை அடக்கம் செய்த புதுச்சேரி பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்புக்கு விருது!

கொ
ரோனா நோய் தொற்றால் இறந்து போனவர்களின் உடல்களை அடக்கம் செய்ய உறவினர்களே அஞ்சிய போது, நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தன்னார்வலர்கள் தாமாகவே முன்வந்து, இறந்து போனவர்களை கண்ணியமான முறையில் இலவசமாக அடக்கம் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர்.

இவ்வாறு அடக்கம் செய்த புதுச்சேரி மாநில பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு, "கலாம் விஷன் 2020" என்ற விருதினை பசுமை பாதுகாப்பு இயக்கம் நிறுவனர் ஆனந்த ஆரோக்கியதாஸ் மற்றும் சிறு தொண்டு சேவை மையம் நிறுவனர் டாக்டர். ஷீத்தல் நாயக் ஆகியோர் விருது வழங்கி கௌரவித்தனர்.

இவ்விருதினை புதுச்சேரி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில்
பகுதி தலைவர் அஹமது அலி அதனை பெற்றுக் கொண்டார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :