லிந்துலை விவசாயிகளை சந்தித்தார் அமைச்சர் மஹிந்தானந்தநோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா-
லிந்துலையில் விவசாயிகளுக்கு உதவிகள் அமைச்சர் மஹிந்தானந்த உறுதி
லிந்துலை பிரதேச விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கேட்டறியும் கூட்டம் 28/12/2020 தலவாகலை லிந்துலை விவசாய மத்திய நிலையத்தில் இடம்பெற்றது

விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுகமகே தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் நுவரெலியா மாவட்ட விவசாய திணைக்கள அதிகாரிகள் மற்றும் லிந்துலை பிரதேச மரக்கறி விவசாயம் செய்வோர் கலந்து கொண்டனர்
இதற் போது லிந்துலை பிரதேசத்தில் மரக்கறி உற்பத்தியாளர்களிடம் இடைத்தரகர்கள் குறைந்த விலையில் தம்மிடமிருந்து மரகறிகளை கொள்வனவு செய்வதால் தாம் முதலீட்டையே பெற்றுக்கொள்ள முடியாதுள்ளாதாக விவசாயிகள் தெரிவித்தனர்

இதன் போது உரிய விலைக்கு மரக்கறிகளை நேரடியாக கொழும்பு மத்திய நிலையத்திற்கு ஏற்றுமதி செய்வது தொடர்பிலும் லிந்துலையில் மரக்கறி கொள்வனவு மத்திய நிலையமொன்றை அமைத்தல் , விவசாயம் செய்ய காணி , மாணிய விலையில் பசளை ,விவசாய இயந்திரங்கள் வழங்குவது தொடர்பிலும் கவனம் செலுத்துவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :