மருதமுனை இரண்டு கட்டங்களாக பங்கீடப்படவிருக்கும் ஸக்காத் வினியோகப் பொருட்கள்.றாசிக் நபாயிஸ்-
ருதமுனையில் ஸக்காத் நிதியத்தின் ஏற்பாட்டில் 2020ஆம் ஆண்டுக்கான ஸக்காத் வினியோக பங்கீட்டு நிகழ்வு நாளை 29ஆம் திகதி நடார்த்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வருடா வருடம் நடைபெறும் இந்நிகழ்வானது இவ்வருடம் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளதாக ஸக்காத் நிதியத்தின் செயலாளர் எம்.ஆர்.எம்.சமீம் தெரிவித்தார்.
மருதமுனையின் ஆறு கிராம சேவகர் பிரிவுகள், பெரியநீலாவணையில் இரண்டு கிராம சேவகர் பிரிவுகள் உள்ளடங்கலாக எட்டு கிராம சேவக பிரிவில் உள்ள 06 வகையான பயனாளிகளுக்கு இவ்ஸக்காத் வினியோக பொருட்கள்
வழங்கப்பட்டவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸக்காத் நிதியத்தின் தலைவர் எம்.எம்.எம்.ஜெபீர் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வின் முதலாம் கட்ட நிகழ்வு 29ஆம் திகதி காலை 10.30மணிக்கு மருதமுனை
மக்பூலியா ஜும்மா பள்ளிவாசல் மண்டபத்திலும் இரண்டாம் கட்ட நிகழ்வு மாலை 4.30மணிக்கு பெரியநீலாவணை பாக்கியத்துஸ் ஸாலிஹாத் ஜும்மா பள்ளிவாசலில் மண்டபத்திலும் நடைபெறவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :