அமலாக்கத்துறை ஆர்.எஸ்.எஸ் - அமைப்புக்காக வேலை செய்யக்கூடாது! பத்திரிகையாளர் சந்திப்பில் கேம்பஸ் ப்ரண்ட் வலியுறுத்தல்!!சென்னை- செய்யது இப்ராஹிம் கனி-
தேசிய மாணவர் அமைப்பான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
மாநில தலைவர் அப்துல் ரஹ்மான், பொதுச்செயலாளர் அஷ்ரஃப், செயலாளர் முகமது, சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது அக்பர் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாநில தலைவர் அப்துல் ரஹ்மான் பேசியதாவது,
கேம்பஸ் ஃப்ரண்டின் தேசிய பொதுச் செயலாளர் ரவூப் ஷரீப்பை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் போயிட்டு அநியாயமாக கைது செய்ய நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது , அண்மையில் சங்க பரிவாரின் எதிர் கருத்தாளர்களையும் , அரசியல் எதிரிகளையும் வேட்டையாட மத்திய அரசு அமலாக்கத்துறையைப் பயன்படுத்தி வருகிறது . அரசு நிறுவனங்கள் சங்க பரிவாரின் சிப்பாய்களாக மாறுவதைத் தடுக்கும் பொறுப்பு ஜனநாயகவாதிகளுக்கு உள்ளது .

CA - NRC க்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டதற்காக கேம்பஸ் ஃப்ரண்டின் தலைவர்கள் வேட்டையாடப்படுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது . கைது செய்யப்பட்ட பின்னர் ரவூப்பின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக அளித்தனர் என்பது இதற்கு சான்றாகும் .

இது அடுத்த ஆண்டு துவக்கத்தில் CAA - NRC யை அமல்படுத்தப்படுவதற்கு முன்னதாக சங்கபரிவாரை எதிர்க்கும் தலைவர்களையும், இயக்கங்களையும் அச்சுறுத்துவதற்கான பாஜகவின் நடவடிக்கையாகும் . தேசிய பொதுச்செயலாளர் ரவூப் ஷரிபை உடனடியாக விடுவிக்குமாறு கேம்பஸ் ஃப்ரண்டின் தமிழ் மாநிலக் குழு கோருகிறது . CAA - NRC க்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை வகித்த தனிநபர்கள் மற்றும் அமைப்புகளை குறிவைப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் . மாணவர்கள் வெறுப்பு அரசியலுக்கு எதிரான தங்கள் போராட்டத்திலிருந்து பின்வாங்குவர் என்பது ஆர்.எஸ்.எஸ் ன் பலவீனமான எண்ணமாகும் .
தேசியப் பொதுச் செயலாளரை கைது செய்த நடவடிக்கைக்கு எதிராக வலுவான மக்கள் எதிர்ப்பு போராட்டம் உருவாக வேண்டும் . அதேபோல் மக்கள் அனைவரும் பாசிச சங்கப் பரிவார கூட்டங்களுக்கு எதிராக கேம்பஸ் ஃப்ரண்ட்டோடு ஒன்றிணைந்து போராட முன்வர வேண்டும் என்று தமிழ் மாநில குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது . இவ்வாறு அவர் தெரிவித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :