டாக்டர் ஜி.சுகுணன் 24 மணிநேரம் கடமையாற்றும் அதிகாரி.

பாறுக் ஷிஹான்-

கொரோனாவை வைத்து கல்முனையில் அரசியல் நாடகம் அரங்கேறிவருகிறது. பொதுமக்கள் எம்மிடம் விடுத்த வேண்டுகோளையேற்று மேயரிடமும் சுகாதாரபணிப்பாளரிடமும் பொலிசாரிடமும் சென்று மகஜர்களை வழங்கி மாநகர முடக்கத்தின் அவசியம் பற்றி எடுத்துக்கூறினோம்.பின்பு அவர்கள் கொழும்புக்கு அறிவித்ததன்பேரில் கல்முனை முடக்கப்பட்டிருக்கிறது.ஆனால் கொரோனாவிலிருந்து மக்களைக்காப்பாற்றவே அதிகாரிகள் இவ்வாறான தனிமைப்படுத்தல் முடக்கத்தை ஏற்படுத்தினார்கள்.

அதில் ஹரீஸ் போன்ற அரசியல்வாதிகள் தலையிட்டு நீக்க முயற்சிப்பதாக அறிகிறோம்.அப்படியென்றால் வீதியிலிறங்குவோம். மக்கள் போராட்டம் வெடிக்கும் தெரிவிக்க விரும்புகின்றேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தெரிவித்தார்.

இன்று(30) கல்முனை ஊடக மையத்தில் கொரோனா பரவல் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்காக விசேட செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு கூறினார்.இவருடன் இணைந்து ஏனைய கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான க.சிவலிங்கம் இகே.செல்வராசா வ. சந்திரன் ஆகியோர் குறித்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.


மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது

கொரோனா நிலைமை மோசமாகி தொற்று கூடுதலாக இனங்காணப்படுவதனால் கல்முனைமாநகரை முற்றாக முடக்கி மக்களைக் காப்பாற்றுங்கள் இல்லாவிடின் எமது வடக்கு தமிழ்ப்பிரதேசங்களையாவது முடக்கி எமது மக்களைக்காப்பாற்றுங்கள் .

இதனை அமுல்படுத்த உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு தெரிவித்திருந்தோம்.ஆனால் இதுவரை பதில் ஏதும் கிடைக்கவில்லை.இவ்விடயம் குறித்து கல்முனை மாநகரசபை மேயர் சட்டத்தரணி எ.எம்.றக்கீப் கல்முனைப்பிராந்திய சுகாதாரசேவைப்பணிப்பாளர் டொக்டர் குண.சுகுணன் கல்முனை பிரதான பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி கே.எச்.சுஜித்பியந்த ஆகியோரிடம் நாம் வேண்டுகோள் முன்வைத்திருந்தோம்.

எனினும் கொரோனாவை வைத்து கல்முனையில் அரசியல் நாடகம் அரங்கேறிவருகிறது. பொதுமக்கள் எம்மிடம் விடுத்த வேண்டுகோளையேற்று மேயரிடமும் சுகாதாரபணிப்பாளரிடமும் பொலிசாரிடமும் சென்று மகஜர்களை வழங்கி மாநகர முடக்கத்தின் அவசியம் பற்றி எடுத்துக்கூறினோம்.

 பின்பு அவர்கள் கொழும்புக்கு அறிவித்ததன்பேரில் கல்முனை முடக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் அதிகாரிகளே முடக்கினார்கள். இது சாதி இன மதபேதம் பார்த்துமுடக்கப்படவில்லை. கொரோனாவின் உக்கிரத்தாக்கம் எங்குள்ளதோ அதைப்பார்த்தே அதிகாரிகள் தீர்மானித்தனர்.
ஆனால் சிலர் இனரீதியாக முடக்கியதாக முகநூலில் விமர்சனம் செய்கிறனர்.

அத்துடன் இலங்கையில் சுகாதார அதிகாரியொருவர் இரவு பகல் பாராது இன மத பேதம் பாராது அர்ப்பணிப்புடன் 24மணித்தியாலம் கடமை செய்கிறார் என்றால் அது கல்முனைப்பிராந்தியசுகாதாரசேவைபணிப்பாளர் டாக்டர் சுகுணனை சாரும். அவரோடு இணைந்த ஏனைய வைத்தியர்கள் ஊழியர்களும் பாராட்டுக்குரியவர்கள். ஆனால் சில ஈனப்பிறவிகள் அவரையும் முகநூலில் கொச்சைப்படுத்துகின்றனர். இனவாதசாயம் பூசுகின்றனர். உண்மையான கடமைவீரர்களையும் மனம்சலிக்கவைக்கும் இவ்வாறான செயலைச் செய்யாதீர்கள்.அவருக்காக நாம் என்றும் கைகொடுப்போம்.

கல்முனை மாநகரிலுள்ள அத்தனை கடைக்காரர்களும் கொரோனா தங்களுக்கு இல்லையென்ற சான்றிதழைக்காட்டினால் மட்டுமே திறக்கஅனுமதி வழங்கவேண்டும். ஏனென்றால் பிரதான சந்தையில் பிசிஆர் செய்ய சுகாதாரதுறையினர் சென்றபோது 100க்கு மேற்பட்டோர் கடையைபூட்டிவிட்டு ஓடியதாக அறிகிறோம். இவர்கள்தான் பின்னர் சமுகத்தில் கொரோனாவை பரப்புவார்கள். மக்கள் கவனமாகஇருக்கவேண்டுகிறோம் என கூறினார்.

ஏனைய உறுப்பினர்களான க.சிவலிங்கம் இகே.செல்வராசா வ. சந்திரன் ஆகியோர் கருத்துரைக்கையில்:

மக்களைக் காப்பாற்றவேண்டிய கடமை எங்களுக்குமுள்ளது.எனவே நாம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.மக்கள் சுகாதாரவழிகாட்டலைப்பின்பற்றினால் இந்நோயிலிருந்து தப்பலாம். சுகாதாரம் பாதுகாப்புத்துறையோடு ஒத்துழைக்கவேண்டும் என்றனர். அத்துடன் முடக்கும் அதிகாரம் தம்மிடம் இல்லை என தெரிவிக்கப்படும் நிலையில் இனியாவது ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டனர்.

முழு மாநகரையும் முடக்குவதுபற்றி இன்னும் ஆராயவேண்டும்.

 சுகாதாரம் பாதுகாப்புத்துறைகளும் ஆலோசனை தரவேண்டும் என தெரிவித்தனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :