கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டல் ஊழியர்கள் நான்கு பேருக்கு கொரோனா!


ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-

கொழும்பு காலிமுகத் திடலுக்கு எதிரில் அமைந்துள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலான தாஜ் சமுத்திரா ஹோட்டலில் பணிபுரியும் நான்கு ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அந்த தாஜ் சமுத்திரா ஹோட்டல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த நான்கு ஊழியர்களுக்கும் வெளிப்படையான எவ்வித நோய் அறிகுறிகளும் தென்படவில்லை எனவும் அவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அரசாங்கம் வழங்கியுள்ள சுகாதார வழிக்காட்டல்களுக்கு அமைய தாஜ் சமுத்திரா ஹோட்டல் நிர்வாகம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :