M.I.M.இர்ஷாத்-
முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவை தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு அழைத்து வருவது குறித்து இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் பிரதமர் ராஜபக்ஷ இதனை கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி எம்.பிக்கள் சிலர், பஸில் ராஜபக்ஷவை தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு நியமிக்க வேண்டும் எனவும் அதற்கான அழைப்பினை பசிலுக்கு கடிதம் மூலம் அண்மையில் வழங்கியிருந்தனர்.
இது குறித்து குறித்த ஊடகத்திற்கு பேசிய பிரதமர், இப்படி அழைப்பு விடுக்கப்பட்டது என்பதை ஏற்றுக்கொண்டார். ஆனால் இறுதி தீர்மானம் இன்னும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
ReplyForward

0 comments :
Post a Comment