எப்.முபாரக் -
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச சபையினால் கொட்டப்படும் கழிவுகளினால் காட்டு யானைகளினால் அச்சுருத்தல் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கந்தளாய் பிரதேச சபையினால் சேகரிக்கப்படும் கழிவுப்பொருட்களை சூரியபுர பகுதியில் கொண்டு சென்று கொட்டுவதால் குப்பை கூழங்களை உண்பதற்காக தினமும் பகல் மற்றும் இரவு நேரங்களில் காட்டு யானைகள் படையெடுப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கந்தளாய் மூதூர் பிரதான வீதியும் அப்பகுதியிலே செல்கின்றது,அத்தோடு கழிவுகளை கொட்டும் நூறு மீற்றர் தூரத்தில் சூரியபுர மற்றும் ஜயந்திபுர கிராமங்கள் காணப்படுகின்றன.
மக்கள் வசிக்கும் பகுதிகளில் கழிவுகளை கொட்டுவதால் காட்டு யானைகள் தினமும் அட்டகாசப்படுத்துகின்றன.
அதேவேளை பகல் வேளைகளில் வீதியை மறித்துக்கொண்டு காட்டு யானைகள் நிற்பதையும் அவதானிக்க கூடியதாகவுள்ளன.
வீதியால் செல்லுகின்ற வாகனங்களை துரத்துவதையும் அவதானிக்ககூடியதாகவுள்ளன.
இவை தொடர்பாக பல தடவைகள் கந்தளாய் பிரதேச சபைக்கு அறிவித்தும் எந்த பலனும் கிடைக்க வில்லையெனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அப்பகுதியில் காட்டு யானைகளின் தாக்குதலினால் பல மரணங்களும் ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment