குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் விஷேட அறிவிப்பு!


J.f.காமிலா பேகம்-

கொரோனா ரைவஸ் தொற்று நோய் பரவுவதைத் தடுக்கும் வகையில், இன்று (02) முதல், மறு அறிவித்தல் வரை, குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் பத்தரமுல்லை பிரதான அலுவலகத்துக்கு பொதுமக்கள் வருகை தருவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்து என குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்து.

இந்நிலையில், இந்தத் திணைக்களத்தின் பத்தரமுல்லை பிரதான அலுவலகத்தின் மூலம், பெற்றுக்கொள்ளவேண்டிய அத்தியாவசிய சேவைகளுக்காக, அலுவலக வேலை நாள்களில், காலை 8 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை, கீழ்க்காணும் தொலைபேசி இலக்கங்கள் அல்லது மின்னஞ்சல் ஊடாக உரிய பிரிவைத் தொடர்பு கொண்டு, ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

1. கடவுச்சீட்டுப் பிரிவு – 070-7101060 , 070-7101070

2. குடியுரிமைப் பிரிவு – 070-7101030

3. வெளிநாட்டுத் தூதரகப் பிரிவு – 011-5329233, 011-5329235

4. விசா பிரிவு – 070-7101050 (dcvisa@immigration.gov.lk/ acvisa1@immigration.gov.lk/ acvisa2@immigration.gov.lk/ acvisa@immigration.gov.lk)

5. துறைமுகங்கள் பிரிவு – 077-7782505

6. பொதுவான ஆலோசனைகளும் மேலதிக தகவல்களும் – www.immigration.gov.lk

இதேவேளை, கண்டி, வவுனியா, மாத்தறை, குருணாகல் பிராந்தி அலுவலகங்கள், அத்தியவசியத் தேவைகளுக்காகவும் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வதற்கும் திறந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், தற்போது நாட்டில் அமலில் உள்ள சுகாதார ஒழுங்குவிதிகளுக்குக் கட்டுப்பட்டு,

070-7101060, 070-7101070 ஆகிய அலைபேசி இலக்கங்களைத் தொடர்புகொண்டு, திகதியொன்றை ஒதுக்கிய பின்னரு, பிராந்திய அலுவலகங்களுக்கு வருகைத் தருமாறு, அறிவிக்கப்பட்டுள்து.

எனினும், தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களில் உள்ள மக்கள், பிராந்திய அலுவலகங்களுக்கு வருகைத் தருவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :