ஏறாவூர் பொலிஸ் பிரிவு ஆற்றில் மூழ்கி மீனவர் ஒருவர் உயிரிழப்பு.

ஏறாவூர் நிருபர்-

திஹிலிவெட்டை மாவடிமுனைப் பிரதேசத்தைச்சேர்ந்த எட்டுப் பிள்ளைகளின் தந்தையான 50 வயதுடைய வைரமுத்து உதயச்சந்திரன் என்பவரே பலியானவரென தெரிவிக்கப்படுகிறது.

திஹிலிவெட்டைப் பகுதியிலிருந்து முறக்கொட்டாஞ்சேனை பிரதேசத்திற்கு வாவி வழியாக தோணியில் தனியாக பயணம் செய்தவேளையில் தோணி கவிழ்ந்ததையடுத்து இவர் ஆற்றில் மூழ்கி மரணமடைந்ததாக தெரியவருகிறது.

இவர் ஆற்றில் மூழ்கி சில மணி நேரத்தில் வாவியின் நடுப்பகுதியிலுள்ள மண்திட்டியொன்றில் சடலம் கரையொதுங்கியுள்ளது.
மரணமடைந்தவர் வலிப்பு நோயுடையவரென அவரது குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

திடீர் மரணவிசாரணையதிகாரி எம்எஸ்எம். நஸிர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்தார்.

அதையடுத்து உடல் கூறு மற்றும் பீசீஆர் பரிசோதனைகளுக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.

ஏறாவூர்ப் பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :