தொற்று மேலும் பரவலாம்-GMOA எச்சரிக்கை...

MI.இர்ஷாத்-

நாட்டில் கொரோனா தொற்று தொடர்பான தரவுகளை வழங்க, பொதுவான செயற்பாட்டுப் பிரிவொன்று அமைக்கப்பட வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுக்கின்றது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

கொரோனா தொற்று தொடர்பான தரவுகள், பல்வேறு பிரிவுகளில் இருந்து வெளியிடப்பட்டு வருகின்ற நிலையிலேயே, அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தொற்றுநோய் விஞ்ஞான பிரிவிடம் சில தரவுகள் இருக்கின்றன. இராணுவத்திடமும் தரவுகள் இருக்கின்றன. அத்துடன் இன்னும் சில தரப்பினரிடமும் தரவுகள் காணப்படுகின்றன.

குறிப்பாக PCR பரிசோதனை தொடர்பான எண்ணிக்கை தொற்று நோய் பிரிவு ஊடாக இன்றி சுகாதார அமைச்சின் ஆரம்ப பராமரிப்பு சேவையின் பணிப்பாளருக்கே செல்கின்றது. இவையனைத்தும் ஒரு இடத்திற்கு வர வேண்டும்.

தொற்றுநோய்ப் பிரிவு தம்மிடம் உள்ள தரவுகளை மாத்திரம் வைத்து தீர்மானங்களை மேற்கொள்ள முடியாது.

இதனால்தான் நாம் இதற்கான செயற்பாட்டுப் பிரிவொன்றை யோசனையாக முன்வைக்கின்றோம்” என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :