இந்தியாவிலிருந்தோ அல்லது வேறு நாடுகளிலிருந்தோ அண்மையில் எந்தவொரு நபரையும் அழைத்துவரவில்லை என்று பிரண்டிக்ஸ் நிறுவனம் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கிறது.
விசேட ஊடக அறிக்கை ஒன்றை இன்று மாலை வெளியிட்டுள்ள அந்நிறுவனம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.
அதேபோல, ஊழியர்களுக்கு சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றவும், தேவையான சுகாதார வசதிகளை செய்துகொடுக்கவும் நிறுவனம் முன்வரவில்லை என்று கூறப்படுகிற குற்றச்சாட்டையும் பிரண்டிக்ஸ் நிறுவனம் முற்றாக நிராகரித்துள்ளது.
மேலும் மினுவங்கொடை நிறுவனத்திற்கு முன்பாக இருந்து பெண் ஒருவரால் பிரண்டிக்ஸ் நிறுவனத்தில் கொரோனா அவதானம் இருந்தும் தனது வாடகை வீட்டிலிருந்த ஊழியர்களை நிறுவன முகாமை வேலைக்குவரும்படி அழைத்ததாக சொல்லப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதற்கு பதிலளித்திருக்கும் பிரண்டிக்ஸ் நிறுவனம் அந்தக் குற்றச்சாட்டையும் நிராகரித்திருக்கிறது.
0 comments :
Post a Comment