நாட்டை கட்டியெழுப்பும் சௌபாக்கிய தொலைநோக்கு பூண்டுலோயா-வீதி புனரமைப்பு


க.கிஷாந்தன்-


நீண்ட காலமாக குன்றும் குழியுமாக காணப்பட்ட பூண்டுலோயா – ஹெரோ மேல் பிரிவு வீதியை இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் மூலம் அபிவிருத்தி செய்வதற்காக பணிகள் இன்று (18.10.2020) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வேண்டுகோளுக்கமைய பூண்டுலோயா – ஹெரோ மேல் பிரிவு தோட்ட சுமார் 3.5 கிலோ மீற்றர் தூரம் 82 மில்லியன் ரூபா செலவில் பாதையினை அகலப்படுத்தி காபட் இட்டு புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

“நாட்டை கட்டியெழுப்பும் சௌபாக்கிய தொலைநோக்கு” எனும் தொனிப்பொருளில், 100,00 கிலோ மீற்றர் வீதி அபிவிருத்தி செய்யும் தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் நுவரெலியா மாவட்டத்தில் பல வீதிகள் காப்பட் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் பூண்டுலோயா – ஹெரோ மேல் பிரிவு வீதியை காப்பட் செய்து அபிவிருத்தி செய்வதற்காக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வழிகாட்டலில் தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரமேஷ்வரன் பங்கேற்பில் கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தலைமையில் இன்றைய தினம் (18.10.2020) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மேற்படி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், நகர சபை, பிரதேச சபை தலைவர்கள், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள், அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :