மருதமுனை ஆசிரியை பாத்திமா ஸுபாவின் “சுவாசித்துக் கொண்டிருக்கிறேன்”கவிதை நூல் வெளியீ்டு


நூருள் ஹுதா உமர்-

லங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் அச்சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும், ஆசிரியையுமான மருதமுனையைச் சேர்ந்த பாத்திமா ஸுபா அப்துல் றஊப் எழுதிய கவிதைகளின் தொகுப்பான “சுவாசித்துக் கொண்டிருக்கின்றேன்” நூல் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை (03) மருதமுனை கலாச்சார மத்திய நிலைய மண்டபத்தில் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் தேசியத் தலைவரும், இலக்கிய விமர்சகருமான ஜெஸ்மி எம். மூஸாவின் தலைமையில்
நடைபெற்றது.

இந்த நூல் வெளியீட்டு விழாவில் முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரஸ் தேசியத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

வெளியீட்டின் வரவேற்பும் அறிமுக உரையும் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் பொருளாளர் எச்.எம்.எம்.மன்சூர் நிகழ்த்தினார். நூல் நயத்தல் உரையை ஆசிரியர் சங்கத்தின் தலைவரும், இலக்கிய விமர்சகருமான ஆசிரியர் ஜெஸ்மி எம். மூஸா நிகழ்த்த நூலாய்வுரையை இலக்கிய விமர்சகரும் ஆசிரியர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினருமான எம்.அப்துல் றஸாக். நிகழ்த்தினார்.

பிரதேசத்தின் மூத்த இலக்கியவாதிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பு பிரதிகளை பெற்று கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :